–  நாகராஜன் ராஜேந்திரன்

பதின் பருவம் தொட்ட எங்கள்

தமிழ் கல்விக்கூடம்

குருகுலம் போல தொடங்கிய நாள்

நேற்று போல் தோன்றுகிறது

எங்கள் சிட்டுக்குருவிகளின்

வளர்ச்சியை கண்டே வருடங்களின் ஓட்டம்

தெரிகிறது

இரண்டு இலக்க  எண்ணிக்கையில் தொடங்கிய

பயணம்

மூவிலக்கமாய் பரிமாண வளர்ச்சி கண்டு

குருகுல தமிழ் கல்வி இன்று

உயர்நிலை கல்விக்கூடத்தில்

புதிய அரும்புகளுடன் குதூகலமாய் துவங்கியது

அரும்புகளும் மலரும்

மொழியால் உணர்வால் தமிழனை

இணைத்த தாய் தமிழ் என்றும் வளரும்.

Photo credits: Dr. Sakthivel Sadayappan & Karthik Mohanakrishnan