வேங்கை குறிக்கோள்
தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்லும் ஆர்வத்துடன் அவாவுடனும் சின்சியில் விதைக்கப்பட்டுள்ள சிறு விதை. நம் பாரம்பரிய இயல், இசை, நாடக கலைகளின் அனைத்து வடிவங்களையும் பிரதிபலிக்க எண்ணும் ஒரு கூட்டு முயற்சி.
வேங்கையின் பறை பட்டறை எட்டுத்திக்கும் ஒலி முழங்கி நீக்கும் நம் நித்திரை
நம் ஒவ்வொருவரின் மனதிலும் விதைக்கும் நல் முத்திரை
குழுவில் குதூகலமாய் புதிதாய் கரம் கோர்க்கும் நம் தமிழ் மன்னர்கள்
நாளை நிச்சயம் ஜொலிப்பார்கள் இந்த கலைவிர்ப்பனர்கள்
பறையன்றி சிலம்பும் ஒயிலும் என கூடி ஆட ஆவலுடன் தமிழ் சொந்தங்கள்
நிகழ்த்தும் தமிழ் மரபின் பல வர்ண ஜாலங்கள்
குழுவின் வளர்ச்சி கொண்டாட்டமான பயிற்சி
முயல்வோமா இன்னும் பல முயற்சி
பிரதிபலிப்போமா தமிழ்கலைகளை உயர்த்தி, கவனம் செலுத்தி, நிலை நிறுத்தி
நம் குறிக்கோளின் முதற்படியாக பறையினை முறையுடன் பயின்று அரங்கேற்றமும், அடுத்த ஆட்டமும் நிகழ்த்தியுள்ளனர் சின்சி வேங்கைகள். இதன் தொடர்ச்சியாக இந்த தொற்றுக்காலத்தில் நம் நாட்டுப்புறக்கலை வித்தகர்கள் மூலம் வாரம்தோறும் இணையவழியாகவும், தொடர்ந்து நம் குழுவுடனும் கூட்டுப்பயிற்சியாகவும் அடுத்த கட்ட நகர்வை நோக்கி பயணிக்கிறார்கள். இதோ இன்று அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டபிறகு திறந்த வெளி பூங்காவில் வாரம்தோறும் நேரில் பயிற்சியை தொடர்கின்றனர். ஆர்வமுள்ளோர் அனைவரும் கரம் கோர்க்க வரவேற்கப்படுகின்றனர்.
விரைவில் பிற நாட்டுப்புற கலைகளையும் , பயிற்றுவிக்கும் முயல்வுகளையும் ஆக்கப்படுத்த விழைகிறோம். உங்கள் கருத்துக்களை பகிருங்கள். குழுவாக செயல்படுத்த விழைவோம். கரம் சேர்ப்போம். செயல் வடிவம் கொடுப்போம்.
VENGAI MISSION
Cinci Vengai would promote and encourage growth of all rural folk art forms around this region, so as to thrive and grow their rich heritage of Iyal (Literature), Isai (Music) & Nadagam (Drama)