– திரு. முருகானந்தம் ராமச்சந்திரன்

சின்ன தம்பி :   குளிர் குறைஞ்சு  நல்லா வெளியே சுத்துற அளவுக்கு ஊருக்குள்ள வெப்பநிலை கூடி இருக்கு. வர்ற சனி ஞாயிறு எங்காவது போகலாமாண்ணே.

பெரிய தம்பி :  இந்த வாரம் எங்கேயும் வெளியூர் போக முடியாதுடா தம்பி.

சின்ன தம்பி  : ஏன்ணே.?

பெரிய தம்பி : நான் நம்ம தமிழ்ச்சங்கம் வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு நடத்துற  “அலெக்ஸ்” நகைச்சுவை(Alex Show)நிகழ்ச்சிக்கு போறேன்ல. நீ வாரியா ?

சின்ன தம்பி  : அப்படியா எனக்கு தெரியாதே? என்னைக்கு  எந்த இடத்தில?

பெரிய தம்பி : வருகிற ஞாயிறு ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு “Lakota West freshman School, 5050 Tylersville road, West Chester, OH-45069”. அனுமதிச்சீட்டு வாங்குவதற்கு www.cincytamilsangam.org வலைத்தளத்தில் போய் பாரு எல்லா தகவலும் இருக்கு.

சின்ன தம்பி  : நண்பர்கள் கூட்டிட்டு வரலாமாண்ணே?

பெரிய தம்பி : இப்ப என்ன சொன்னேன்? வலைத்தளத்தில் போய் பாரு எல்லா தகவலும் இருக்குனு சொன்னேனா இல்லையா…

சின்ன தம்பி  : ஓ சரிண்ணே… சரிண்ணே…. நானும் இந்த வாரம் “அலெக்ஸ்”(Alex Live Show) நிகழ்ச்சிக்கே வந்துடுறேன்.

பெரிய தம்பி : கூடிய சீக்கிரம் வாங்கிடு. 4 நாள் தான் இருக்கு!! அப்புறம் டிக்கெட் வித்துவிட்டதுனு  அழ கூடாது.

சின்ன தம்பி  :அடுத்த வாரம் எங்கேயாவது பயணம் போகலாமா?

பெரிய தம்பி : அதான் அடுத்த சனிக்கிழமை நமது சின்சினாட்டி தமிழ்ச் சங்கத்தின் சித்திரை திருவிழா இருக்கே…

சின்ன தம்பி  :  ஓ அப்படியாண்ணே? அது எங்கே? அனுமதிச் சீட்டு எப்படி வாங்குறது.. என்ன விபரம்…

பெரிய தம்பி : ஏய்ய்…… என்ன சொன்னேன்? www.cincytamilsangam.org  வலைத்தளத்தில் போய் உறுப்பினரா login செஞ்சு பார்த்தா எல்லா தகவலும் இருக்கு…

சின்ன தம்பி  : இதுக்குமா?

பெரிய தம்பி :ஆமா.. தமிழ்ச்சங்க நிகழ்ச்சி பற்றி எல்லா விவரமும் வலைதளத்தில் எல்லா நேரத்திலும் இருக்கும். போய் பார்த்துக்க…

சின்ன தம்பி  : நன்றிண்ணே… நான் பேஸ்புக்கிலேயே பாதி நேரத்தை செலவு பண்றேன் அதுல யாராவது இதை பத்தி சொன்னா நல்லா இருக்கும்.. தெரிஞ்சிக்கலாம்..

பெரிய தம்பி : அப்படியா?  சின்சினாட்டி மாநகர் தமிழ்ச் சங்க உறுப்பினர் மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்காக “ஊர் திண்ணை” அப்படின்னு நம்ம தமிழ்ச் சங்கம் ஒரு முகநூல் குழுமம் ஆரம்பிச்சிட்டாங்க தெரியுமா? அதுல போய் நீ சேர்ந்துக்கோ.. நம்ம ஊர்ல நடக்கிற விஷயங்கள் எல்லாம் முகநூல் போகும்போது பாத்துக்கலாம்… நீ உன் கருத்துக்களை எழுதலாம் மத்தவங்க எழுதற கருத்துக்களை படிக்கலாம்,  தமிழ்ச்சங்க நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புகளையும் செய்திகளையும் தவறாமல் பாத்துக்கலாம். சேர்ந்துகிறியா?

சின்ன தம்பி  :  முகநூல் குழுமம் அப்படி என்னாண்ணே..?

பெரிய தம்பி : அதுதான் facebook group..

சின்ன தம்பி  : அதுல எப்படி சேர்வது? நான் மட்டும் தான் சேர முடியுமா இல்ல என் மனைவியையும் சேர்த்துக்கலாமா?

பெரிய தம்பி :  சின்சினாட்டி மாநகர் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த யார் வேணாலும் சேர்ந்துக்கலாம்.
contact@cincytamilsangam.org என்று மின்னஞ்சல் முகவரிக்கு  ஒரு மின்னஞ்சல் அனுப்பு.  பொருள் வாக்கியத்தில் “ஊர் திண்ணை – முகநூல் பெயர்”
 < உங்கள் முக நூல் பெயர்> 
 < உங்கள் குடும்ப உறுப்பினர்  முக நூல் பெயர்>

எடுத்துக்காட்டா நீ அனுப்பும் போது உருவாக்கத்தை கீழ்காணுமாறு எழுது:
பொருள் வாக்கியம்: ஊர் திண்ணை – முகநூல் பெயர்
< சின்ன தம்பி>
<  சின்ன தம்பியின் மனைவி>

சின்ன தம்பி  : அண்ணே ஆங்கிலத்தில கொஞ்சம் சொல்லுறீங்கலாணே….

பெரிய தம்பி : சரி சொல்றேன்…
Send an email to contact@cincytamilsangam.org with
subject line : Oor thinnai – Facebook ID
In the body of the email, list the FaceBook IDs that you would like to add to “oor thinnai”.
<your Facebook ID>
<your wife/husband’s Facebook ID>
:
Example:
subject line : Oor thinnai – Facebook ID 
<Chinna Thambi>
<Chinna Thambi’s wife>

சின்ன தம்பி  : அப்படியே செஞ்சுறேன்.. நன்றிண்ணே..

பெரிய தம்பி : அடுத்த சங்கமம் இதழ், தமிழ்ப்பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கான வெளியீடு.அதனால கவிதை, கட்டுரை, துணுக்கு, மற்றும் ஓவியங்கள் ஏதாவது நீயோ இல்ல உன்னோட குடும்பத்தாரோ அனுப்பணும்னா ஏப்ரல் 10க்குள்ள பண்ணு. 


 சின்ன தம்பி  :  ஓ அப்படியாண்ணே?  எப்படிண்ணே அனுப்பனும்?

 பெரிய தம்பி : நீ online-லேயே அனுப்பலாம்: www.cincytamilsangam.org/sangamam/  

 சின்ன தம்பி  : நன்றிண்ணே.. அப்புறம் பாக்கலாம்..

 பெரிய தம்பி : நன்றி தம்பி பார்க்கலாம்.