ஒவ்வொரு வருடமும் தமிழ் பள்ளி, தமிழ்ஆர்வ போட்டிகள் ஏற்பாடு செய்வார்கள். இதன் முக்கிய நோக்கம் பாரம்பரிய வகுப்புகள் மூலம் மட்டும் அல்லாமல், ஒரு ஆர்வமூட்டும் முறையில் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைத்து கொடுப்பதே ஆகும்.

இந்த வருடமும் பள்ளி மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டு சக மாணவர்களையும் உற்சாகபடுத்தினார்கள். குழந்தைகளுக்கு பொறுமையாக கற்று கொடுத்து, மேலும் ஆதரவும், ஊக்குவிப்பும் தந்த பெற்றோர்களுக்கு தமிழ் பள்ளி மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.

கட்டுரை போட்டி

10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு “எனது தமிழ்” என்ற தலைப்பு தரப்பட்டது. போட்டி விதிமுறைப்படி 30 நிமிடங்களில் குறைந்தபட்சம் 100 வார்த்தைகள் கொண்ட ஒரு கட்டுரை எழுத வேண்டும். இந்த வருடம் கட்டுரை போட்டியில் பெரியவர்களும் பங்கேற்க ஒரு இனிய வாய்ப்பு அமைந்தது. தமிழின் கதை என்ற தலைப்பில், 30 நிமிடங்களில் குறைந்தபட்சம் 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுத வேண்டும். இந்த சவாலை ஏற்று கொண்டு பெரியவர்களும் சளைக்காமல் பங்கு பெற்றனர் .

பேச்சு போட்டி

நிலை 1 (வயது 5- 7), நிலை 2 (வயது 8-11), நிலை 3 (வயது 12-16) என்று மூன்று நிலைகளாக பங்கேற்பாளர்கள் பிரிக்க பட்டனர். அனைவரும் அவர்களுக்கு பிடித்த தலைப்பில் 2-5 நிமிடம் வரை பேச அனுமதித்தனர். சிறு குழந்தைகள் அவர்களின் மழலையால் மனதை கொள்ளை கொண்டனர். மேல் நிலை வகுப்பு குழந்தைகளோ அவர்களின் சிறந்த கருத்து நிறைந்த பேச்சாற்றலால் பாராட்டு பெற்றனர் .

வார்த்தை தேனீ

தொடக்க நிலை குழந்தைகளுக்கு, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் தமிழ் வார்த்தையை சோதித்தல், நடு நிலை குழந்தைகளுக்கு, அன்றாட நடவடிக்கையில் உள்ள சிறு சிறு வாக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்து கூறுதல் , உயர் நிலைக்கு தொடர் எழுத்துக்களை தமிழில் பிழையில்லாமல் எழுதல் என போட்டி அமைக்கப்பட்டது. கேள்விகள் அனைத்தும் அவர்கள் படிக்கும் தமிழ் புத்தகங்களில் இருந்தே தேர்ந்து எடுக்க பட்டன.

திருக்குறள் தேனீ

தமிழ் பள்ளி கீழ்கண்ட அதிகாரங்களை போட்டிக்காக தேர்ந்தெடுத்தது. “கடவுள் வாழ்த்து, அன்புடைமை, அறிவுடைமை, ஒழுக்கவுடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், வாய்மை, கல்வி, நட்பு, செய்நன்றி அறிதல் “

6-10 வயதிற்குட்பட்டவர்கள் ஏதேனும் 12 திருக்குறள்கள், மற்றும் 5 திருக்குறள்களுக்கான தெளிவுரையை சொல்ல வேண்டும். 11 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஏதேனும் 30 திருக்குறள்கள் மற்றும் தெளிவுரையை மனப்பாடம் செய்திருக்க வேண்டும். நடுவர்கள் சொல்லும் முதல் வார்த்தையை கொண்டு பங்கேற்பாளர்கள் அந்த குறளினை ஒப்பிக்க வேண்டும். மேலும் தெளிவுரையும் கூற வேண்டும். மாற்றாக நடுவர் சொல்லும் குறளின் தெளிவுரையை கூறவும் வேண்டும்.

அப்பா! மிகவும் சிரமமாக இருக்கிறதே என்று தோணுகிறதா? ஆனால் நம் குழந்தைகள் இந்த சவாலையும் அழகாக எதிர் கொண்டார்கள். அவர்களின் ஈடுபாடும், சிரத்தையும் கண்டு நடுவர்கள் வியந்தனர்.

வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் பின்வருமாறு:-

நிலை 1
 1. நிமேஷ் ராஜா  
 2. விபு வினோதன்
 3. அத்வைத் பிரதீப் 
சிறப்பு இடம் பெற்றவர்கள் – 
 1. லோசனி கார்த்திக்  
 2. ஜோதிகா ஜெயப்பிரகாஷ்
நிலை 2
 1. வர்ஷினி கார்த்திக் 
 2. கிருஷ்ணா கரன் கார்த்திக் 
 3. ஷாமினி கோபிநாத் 
சிறப்பு இடம் பெற்றவர்கள்
 1. சாத்விகன் கிருபாகரன்
 2. சஞ்சிதா சங்கர்
 3. சம்கீதா பரந்தாமன்
நிலை 3
 1. மிதுல் கிரித்திக்
 2. மோனஸ்ரீ கோபிநாத் 
நிலை 1
 1. விபு வினோதன்
 2. சபர்ணா, ஸ்ரீ தன்யா , சாய் அவனீஷ் 
நிலை 2
 1. இஷான்வி கார்த்திகேயன்
 2. அக்ஷய் கார்த்திக்
 3. சகானா சங்கர்
நிலை 3
 1. ரிஷிகா ஜெயபிரகாஷ்
 2. ஸ்ரீநிதி வளத்தப்பன்
 3. மிதுல் கிருத்திக்
குழந்தைகள்
 1. ஸ்ரீநிதி வளத்தப்பன்
 2. நித்திலா ராமச்சந்திரன்
 3. விஷ்வா ஜெயபிரகாஷ்
பெரியவர்கள்
 1. பிரியா சௌந்தரராஜன்
 2. அருண் குணசேகரன்
 3. ரஜினி ஜெயப்பிரகாஷ்
நிலை 2
 1. சரண் கலையரசன்
 2. வைஷ்ணவி வெங்கடேஷ்
 3. ஸ்ரீநிதி வளத்தப்பன்
சிறப்பு இடம் பெற்றவர்கள் 
 1. நித்திலா ராமச்சந்திரன்
 2. நகுல் சௌந்தர்
நிலை 1
12 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்து அதில் ஐந்து திருக்குறளுக்கு விளக்கம் சொன்னவர்கள் :
 1. சபர்ணா
 2. அத்வைத்
 3. அஸ்வின்
 4. ரக்சன் கோபிநாத்
 5. நந்தனா கணபதி
 6. நேகா பாலாஜி
 7. சகானா சங்கர்
 8. கிரிஷ் ஷங்கர்
 9. ஹரிணி கார்த்திகேயன்
 10. ஸ்ரீதன்யா
 11. அனிஷ் சத்யநாராயணன்
 12. ரக்ஷனா கமலேஷ்
 13. தருண் கோபிநாத்
 14. ஸ்ரதா ராகவேந்திரன்
 15. தனிகா வேலு
 16. தனுஜா வேலு
 17. அக்ஷய் கார்த்திக்
 18. தயா ராகவா
 19. விகுந்த் வெங்கடேஷ்
 20. ஸ்ரதா ஷாம்குமார்
 21. தீக்ஷனா ராமராஜன்
 22. வைபவ் சிவ்
 23. கிஷோர் சுப்பையா
 24. ஸ்ரீநிதி சந்திரசேகரன்
 25. கோகுல் செந்தில்குமார்
 26. ஓம்கார் அங்குராஜ்
 27. வர்ஷா மோகன்
 28. ஸ்வேதா வசந்த்
 29. ஸ்ரீகுரு பெசலால் ராம்மோகன்
மற்ற பங்கேற்பாளர்கள்
 1. அர்ஜூன் பத்மநாபன்
 2. அனுஷ்கா பத்மநாபன்
 3. சுதிக்க்ஷா
 4. சர்வேஷ் பாலமுருகன்
 5. தியா கிருபாகரன்
 6. அகிலன் முத்தையா
 7. ஜெயஸ்ரீ தியாகராஜன்