ஏப்ரல் 19,2025 அன்று சித்திரைத்திருவிழா இனிதே நடந்தேறியது.

விழாவை கண்டு மகிழ வந்த பார்வையாளர்கள்,விழாவில் பங்கு பெற்றோர், விழா மிக சிறப்பாக நடைபெற உதவிய தொண்டர்கள் அனைவருக்கும் சி.மா.த.ச. சார்பில் நன்றிகள் பல.

அன்புடன்
சி.மா.த.ச.

Chithirai Thiruvizha-2025 celebrations were held on April 19, 2025.

GCTS expresses its sincere appreciation and is profoundly grateful to the audience, participants, and the volunteers for their unwavering support to the event’s resounding success.

Regards
GCTS

புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்

உங்களிடம் சித்திரைத் திருவிழா – 2025 கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் எதுவும் இருந்தால், அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள புகைப்பட/காணொளி தொகுப்பில் சேர்த்து விடுங்கள். இவை நம் சி.மா.த.ச வலைதளத்தில் /வலையொளியில் சேர்க்கப்படும்.

புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்

Photos and Videos

If you have any photos and videos of the Chitrai thirivizha -2025 celebration that you would like to share with others, please add them to the photo/video collection below. These will be added to our GCTS website/YouTube channel.

Photos and Videos

சி.மா.த.ச. பகிரிக்குழுவில் இணைந்துகொள்ள விருப்பமா?

கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை பயன்படுத்தி நீங்கள் சி.மா.த.ச. பகிரிக்குழுவில் இணைந்து கொள்ளலாம்.

சி.மா.த.ச. பகிரிக்குழு

Interested in joining GCTS WhatsApp group?

Please check the following URL to join GCTS WhatsApp group.

GCTS WhatsApp Group

சித்திரைத்திருவிழா – முக்கிய அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்,

** ஆர்வமுடன் அனுமதிச் சீட்டுகளை வாங்கி “அரங்கு நிறைந்த” விழாவில் பங்கேற்கக்காத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.**

இடம்:

Lebanon City Schools District Performance Center

160 Miller Road
Lebanon, OH 45036

Directions to the venue

நாள் : 19 ஏப்ரல் 2025, சனிக்கிழமை
பதிவு ஆரம்பம் : முற்பகல் 11:30 மணி

மேடை நிகழ்ச்சியில் பங்கேற்போர் முற்பகல் 11:30 மணியிலிருந்து 12:15 மணிக்குள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேடை நிகழ்ச்சி ஆரம்பம் : பிற்பகல் 12:30 மணி

விழா சுவையான இரவு விருந்துடன் இனிதே நிறைவுறும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

(1) முற்பகல் 11:30 மணிக்கு பதிவு ஆரம்பம். அப்படி என்றால் என்ன?

மேடை நிகழ்ச்சியில் பங்கேற்போர் முற்பகல் 11:30 மணியிலிருந்து 12:15 மணிக்குள் நேரில் வந்து பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

அனைத்து விருந்தினர்களும் உங்கள் அனுமதி சீட்டு வாங்கியதற்கான மின்னஞ்சலை விழா அரங்கில் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு பகுதியில் சென்று காண்பித்து, விழா நுழைவு மற்றும் இரவு விருந்துக்கான கைப்பட்டைகளை வாங்கிக் கொண்டு அரங்கினுள் செல்லலாம் .

(2) கால தாமதமாக 12:30 மணிக்கு மேல் வந்தால் என்னவாகும்?

உங்களுக்கான அனுமதிச் சீட்டு விழா அரங்கில் வரவேற்பு பகுதியில் உங்களுக்காக நீங்கள் வரும் வரை காத்திருக்கும். ஆனால் நீங்கள் அருமையான சில மேடை நிகழ்ச்சிகளை பார்க்கும் வாய்ப்பை இழந்து இருப்பீர்கள்.

(3) இரவு விருந்து எல்லோருக்கும் ஒரே நேரத்தில் பரிமாறப்படுமா?

இல்லை .இரவு உணவு எடுத்து செல்லும் வகையில் (To-Go box) வழங்கப்படும் . அனைவரும் கைப்பட்டையை காண்பித்து உணவை பெற்றுக் கொள்ளலாம்.

(4) நான் என் நண்பரின் அனுமதிச் சீட்டை அவருக்காக முன்கூட்டியே நேரில் வரும் போது வாங்கி வைக்க முடியுமா?

முடியாது. நீங்கள் உங்களுக்கான அனுமதிச் சீட்டை மட்டுமே உங்கள் மின்னஞ்சலை காண்பித்து வாங்கிக்கொள்ள முடியும்.

(5) விழா தொடர்பான அறிவுப்புகள் எதுவும் வந்தால் எப்படி தெரிந்து கொள்வது?

எல்லா விபரங்களும் சி.மா.த.ச. பகிரிக்குழுவிலும், சி.மா.த.ச. இணையதள பக்கத்திலும் அறிவிக்கப்படும்.

நீங்கள் உங்கள் நண்பர்களிடம் கீழே உள்ள வலைதள முகவரியை கொடுத்து இந்த பகிரி குழுவில் சேர்ந்து கொள்ளச் சொல்லுங்கள்.

GCTS சி.மா.த.ச.

(4) இந்த விழா சிறப்பாக நடைபெற நான் உங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்?

விழாக்குழுவினர் உங்களை ஏதேனும் உதவிக்கு அழைத்தால் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

விழா அரங்கிற்குள் (மேடை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கு) உணவு, தின்பண்டங்கள், தண்ணீர், குளிர் பானங்கள் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது.

நீங்கள் கொண்டு வரும் தின்பண்டங்கள் குளிர்பானங்கள் மற்றவைகளை அரங்கத்திற்கு வெளியே சாப்பிடலாம்.

மேடை நிகழ்ச்சியில் பங்கேற்போர் வியாபார நிறுவனங்கள், அறக்கட்டளைகள் சம்பந்தப்பட்ட பெயர்களையோ அல்லது வாக்கியங்களையோ கொண்ட உடைகள் மற்றும் பதாகைகளை பயன்படுத்தாதீர்கள்.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அரங்கிற்கு உள்ளிருந்து வெளியே வருவதையும் அல்லது வெளியே இருந்து உள்ளே செல்வதையும் தவிர்க்கவும். மேடை நிகழ்ச்சியில் பங்கேற்போர் அனைவரையும் உற்சாகப்படுத்தி விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு கொடுங்கள்.

விழாக் குழுவினர்கள் வேண்டுகோற்படி விழா சிறப்பாக நடந்து முடிய உங்கள் ஒத்துழைப்பை கொடுங்கள்.

நன்றி,
சி.மா.த.ச நிர்வாகக் குழு.

Chithirai Thiruvizha – Important Announcement

Greetings.

** Thank you every one who eagerly purchased tickets and are looking forward to attending the event **

Location:

Lebanon City Schools District Performance Center

160 Miller Road
Lebanon, OH 45036

Directions to the venue

Date: 19 April 2025- Saturday

Registration starts: 11:30 AM
Stage show start: 12:15 PM

The celebration will conclude a delicious dinner compliment.

FAQs:

(1) Registration starts at 11:30 AM. What does it mean?

Please show your confirmation email and collect your entry and dinner wristbands from the reception and get ready to enjoy the performances.

(2) What happens if I arrive late at 12:30 PM

Your tickets will be waiting at reception desk until you arrive.

But you will miss the opportunity to watch some fantastic stage shows and the participants will lose the opportunity to perform.

(3) Will the dinner be served to everyone at the same time?

No. It will be boxed dinner (To-Go). You can show your wristband and get the boxes.

(4) Can I collect my friend’s tickets when I come in person for him in advance?

Can not. You can only collect your tickets by showing your confirmation email.

(5) How do I get update related to this event?

All details will be announced in this whatsApp share group and also published on GCTS Website..

You can give your friends the WhatsApp address below and ask them to join this sharing group.

Please feel free to circulate the following URL to your friends circle and ask them to join if they want to get GCTS announcement and updates.

GCTS சி.மா.த.ச

(6) How can I help you to make this event a success?

If the organizing committee calls you for any help, do what you can to help.

Do not eat or drink any food, snacks, water or cold drinks inside the auditorium.

Snacks, soft drinks and other things you bring can be eaten outside the auditorium.

Stage participants: Please do not use t-shirts and/or banners with names or phrases associated with any commercial organizations and/or charities.

Avoid coming in or out of the auditorium while the show is in progress.

Give your cooperation to conduct this event for enjoyable for everyone.

Thanks,
GCTS Executive Committee

சித்திரைத்திருவிழா – முக்கிய அறிவிப்பு

பதிவு ஆரம்பம் : முற்பகல் 11:30 மணி
நிகழ்ச்சி ஆரம்பம் : பிற்பகல் 12:30 மணி

அனைவரும் குறித்த நேரத்திற்கு சரியாக வந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்
சி.மா.த.ச.

 

Chithirai Thiruvizha – Important announcement

REGISTRATION STARTS AT 11:30 AM
STAGE SHOW STARTS AT 12:30 PM

We kindly request you all to arrive on time and join us in making this event a great success.

Regards
GCTS

சித்திரைத்திருவிழா அனுமதிச்சீட்டு விற்பனை நிறைவு பெற்றது.

உங்கள் அனைவரின் ஆர்வத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி. விழாவில் சந்திப்போம்.

அன்புடன்
சி.மா.த.ச.

 

Chithirai Thiruvizha Ticket Sales has been closed.

Thank you all for your Interest and support. Looking forward to meeting you all at the grand event.

Regards
GCTS

DIRECTIONS TO THE VENUE

Please click on the following link to get the directions to the Vizha venue (Lebanon City Schools District Performance Center 160 Miller Rd, Lebanon, OH 45036)

Directions to the venue

Stage Event Participants

Thank you for signing up for the GCTS Chithirai Thiruvizha stage events!
With just a few days to go, we can’t wait to see all the amazing performances!

நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்க விருப்பமா ?

அனைவருக்கும் வணக்கம், வரும் சி.மா.த.ச வின் சித்திரைத் திருவிழாவில் மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆர்வம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவும்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் படிவம்

ஒருங்கிணைப்பாளர்களின் அன்பான கவனத்திற்கு,

மேடை நிகழ்ச்சியில் பங்கேற்போர், சித்திரைத்திருவிழாவிற்கான அனுமதிச்சீட்டுகளையம் பெற கேட்டுக்கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் ‘அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்’ பகுதியை பார்க்கவும்.

To the kind attention of the coordinators

Dear Coordinators, please remind stage show participants to get the admission tickets for Chithirai Thiruvizha, for details please refer to the FAQ section of ticket purchase web page.

மக்கள் இசை நேரம்

சி .மா .த .ச வின் சித்திரைத்திருவிழாவில் ‘மக்கள் இசை நேரம் ‘ நிகழ்ச்சியில் பங்குப் பெற ஆர்வம் இருப்பின் கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவும்.

மக்கள் இசை நேரம்

Are you interested in participating in the ‘Makkal Isai Neram’ program at the upcoming GCTS Chithirai Thiruvizha event? If so, please register using the form below.

Makkal Isai Neram

வழிகாட்டு நெறிமுறைகள்

சி.மா.த.ச. உறுப்பினர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் ஆர்வத்தின் அடிப்படையில், நிர்வாகக்குழுவினரால் வடிவமைக்கப்பட்ட ஆவணம்.

வழிகாட்டு நெறிமுறைகள்

General Guidelines

Designed by GCTS with the best interests of its members and participants in mind

General Guidelines

தன்னார்வ தொண்டர்கள்

தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் உதவிட ஆர்வமுள்ளவர்கள், தங்கள் விவரங்களை கீழே உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புங்கள்.

சி.மா.த.ச – சித்திரைத்திருவிழா – 2025 / தொண்டர்கள் பதிவுப்படிவம

Volunteers

Interested in helping GCTS events? please sign-up using the form below

GCTS – 2025 Chithirai Thiruvizha / Volunteer signup form

Want to reach us ?

Please email us at gctsinfo@gmail.com