சி.மா.த.ச – சித்திரைத்திருவிழா 2026
இடம்: Sinclair Community College 5800, Clyo Rd, Centerville, OH 45459
05/10/2026 – ஞாயிற்றுக்கிழமை
மேடை நிகழ்ச்சி ஆரம்பம் : பகல் 1:00 மணி
விழா இரவு சுவையான விருந்துடன் இனிதே நிறைவுறும்.
நீங்கள் அனைவரும் குறித்த நேரத்திற்கு வந்து விழாவில் முழுமையாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
(1) நேரடியாக விழா அரங்கு வாயிலில் நுழைவு சீட்டை வாங்கி கொள்ளலாமா?
இல்லை. சி.மா.த.ச வலைதளத்தில் 2 மே 2026, சனிக்கிழமை இரவு 10 மணிக்கு முன்பாக அனுமதி சீட்டை வாங்கி கொள்ளவும். இந்த நிகழ்விற்கான (பதிவு) கட்டணம் திருப்பி வழங்கப்படாது.
(2) தமிழ்ச்சங்க உறுப்பினராக தற்போது இல்லை. இப்பொழுதுஉறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் கட்டண விகிதத்தில் அனுமதி சீட்டுகளை பெற முடியுமா?
முடியும், உறுப்பினராக சேர்ந்து அதன் பின்பு உறுப்பினர் கட்டணத்தில் அனுமதி சீட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம்.
(3) விழாவில் கலந்து கொண்டு சீக்கிரமே செல்ல இருப்பவர்கள் அல்லது தமது குழந்தைகைளின் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் செல்ல இருப்பவர்கள் அனுமதி சீட்டு கட்டாயம் வாங்க வேண்டுமா?
ஆமாம். கலையரங்கத்திற்குள் நுழைவதற்கு அனுமதி சீட்டு கட்டாயம் வாங்கியிருக்க வேண்டும்.
(4) அனுமதி சீட்டு யார்யார் வாங்க வேண்டும்?
விழா கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்கள், பார்வையாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் அனைவரும் அனுமதி சீட்டு வாங்க வேண்டும்.
(5) விழாவின் கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற கட்டணம் செலுத்தியவர்கள் அனுமதி சீட்டும் கட்டாயம் வாங்க வேண்டுமா?
ஆமாம். விழாவின் கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற கட்டணம் செலுத்தியவர்களும் அனுமதி சீட்டு கட்டாயம் வாங்க வேண்டும்,
(6) அனுமதி சீட்டு மின்னஞ்சலை விழா அரங்கில் காண்பிக்க வேண்டுமா?
ஆம். விழா நுழைவாயிலில் வரவேற்பு பகுதியில் நீங்கள் அனுமதி சீட்டு வாங்கிய மின்னஞ்சலை காண்பித்து செல்ல வேண்டும்.
(7) விருந்தில் விருப்பத்திற்கேற்ப சைவ அல்லது அசைவ உணவை பெற்றுக்கொள்ள முடியுமா?
ஆம். உங்கள் விருப்பத்திற்கேற்ப சைவ அல்லது அசைவ உணவை பெற்றுக்கொள்ளலாம். நிகழ்ச்சி சீராக நடைபெற உதவுவதற்காக, நிகழ்ச்சியின் போது சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கப்படமாட்டாது — ஆனால் அவை நிகழ்விடத்தில் விற்பனையாளர்களால் குறைந்த விலையில் வாங்குவதற்கு கிடைக்கும்.
(8) தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்கு நான் எவ்வாறு உதவலாம்? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
விழா நடத்தும் வேலைகளில், தன்னார்வ தொண்டர்களின் உதவி அதிகம் தேவைப்படுகிறது . உங்கள் விவரங்களை கீழே உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இணைந்து செயல்பட்டு விழா சிறப்பாக நடைபெற உதவிடுங்கள்.
சி.மா.த.ச – 2026 சித்திரைத் திருவிழா / தொண்டர்கள் பதிவு படிவம்
நன்றியுடன்,
சின்சினாட்டி மாநகர தமிழ் சங்க நிர்வாகக்குழு.
GCTS Chithirai Thiruvizha 2026
Location: Sinclair Community College 5800, Clyo Rd, Centerville, OH 45459
05/10/2026 – Sunday
Thiruvizha starts at 1:00 PM
Vizha will conclude with a delicious complimentary dinner.
FAQ
(1) Can I buy “Admission Tickets” directly at the venue entrance?
No. please purchase your entry tickets before 10 pm on Sunday , 2 May 2026, on the GCTS website. This is a non-refundable event.
(2) If a current non-member of Tamil Sangam becomes a member, will he/she be able to get the admission tickets at the “Member Price”?
Yes. Members will be able to purchase admission tickets at the “member price”.
(3) Should “Admission Tickets” be purchased if planning to leave early or soon after the kids performance?
Yes. Admission tickets are needed to gain entry into the auditorium.
(4) Who are all required to buy the “Admission Tickets”?
The volunteers, stage show participants and the audience all need to buy the admission tickets.
(5) Should those who paid “Stage Show Participation Fee” need to buy “Admission Tickets” ?
Yes. Admission tickets are needed for the “Stage Show Participants”.
(6) Do I need to show the email confirmation of the ticket purchase in the entrance?
Yes. In the reception area at the entrance, you have to show the e-mail which you received after your online ticket purchase.
(7) For Dinner can I choose Non-Vegetarian or Vegetarian?
Yes. There will be Non-Vegetarian and Vegetarian dinner options. To help keep the event running smoothly, snacks and tea won’t be provided during the event — but they’ll be available for purchase at a nominal price from vendors at the venue.
(8) How can I support GCTS Tamil Sangam event?
To make the GCTS event run smoothly and successfully, many volunteers are required. To volunteer, please sign-up using the form below
GCTS – 2026 Chithirai Thiruvizha / Volunteer signup form