உங்கள் நாட்காட்டியில் குறித்து விட்டீர்களா?

சித்திரைத்திருநாள் கொண்டாட்டங்கள் கலை கட்ட துவங்கிவிட்டன. அதன் ஒரு அங்கமாக, தமிழார்வ போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

இந்த வருடம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வார்த்தைத்தேனீ, திருக்குறள் தேனீ என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

அனைத்துப்போட்டியிலும், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிகளில் பங்குபெற விரும்புவோர், தங்கள் பெயரை தமிழ்ப்பள்ளியிலோ அல்லது தங்கள் ஆசிரியரிடமோ பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

பேச்சுப்போட்டி – 03/09/2019 (3:30PM – 5:00PM)

கட்டுரைப்போட்டி – 03/02/2019 (3:30PM – 5:00PM)

வார்த்தைத்தேனீ – 03/02/2019 (3:30PM – 5:00PM)

திருக்குறள் தேனீ – 03/09/2019 (3:30PM – 5:00PM)

மேலும் விவரங்களுக்கு மின் அஞ்சலைப்பார்க்கவும்.

அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு:

இப்போட்டிகளில், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, அனைவரும் கலந்து கொள்ளலாம்.

நம் போட்டிகளுக்காக நாகராஜன் ராஜேந்திரன் எழுதிய  அற்புதமான கவிதைகள் – இதோ உங்களுக்காக !!!

பேசா மொழிகள் 

கம்பன் வீட்டு கட்டுத்தறி மட்டுமல்ல
எங்கள் வீட்டு குட்டிகளும்
போர் முரசுகளாய் முழக்கமிடும்
வார்த்தை ஜாலங்களுடன்
கிள்ளை மொழிகளும் கூடி
விளையாடும் பேசும் போட்டி
ஆம் பேச்சுப் போட்டி !!

கட்டும் உரைகள் கட்டுரைகளாய்

கதைகளாய் காரணங்களாய்
கவிதைகளாய் கருத்துக்களாய்
எழுத்துக்களாய் எழுச்சிகளாய்
எட்டுத் திக்கும் வியக்கும் மொழிகளாய்
உங்கள் கை வண்ணத்தை
கருத்து களஞ்சியங்களாய்
எங்களுக்கு விருந்துகள் படைக்க
கட்டுரைகளாய் வடிக்க உங்களுக்கு
அருமையான வாய்ப்பு !

குறள் – கிள்ளைகளின் குரல்

ஒன்றே முக்கால் அடியில்
உலகையே அளந்த எங்கள்
வள்ளுவனை வணங்கும்
எங்கள் கிள்ளை மொழிகள் !