சி.மா.த.ச பேச்சாளர் பாசறை வழங்கும் குழந்தைகளுக்கான சிறப்பு பட்டிமன்றம்.

தலைப்பு : குழந்தைகளுக்கு விருப்பம் இணைய வழிக்கல்வியா நேரடிக்கல்வியா

2021, மார்ச் 6ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு  Zoom வழியே இணைவோம்!!!

சி.மா.த.ச வலையொளி பதிவு(YOUTUBE LINK)

நடுவர் : திரு. அர்விந்த் மதுரை நடராஜன் அவர்கள்

– சங்கம் வளர்த்த தமிழ் மண்ணின் மைந்தன்.
– கணினி வல்லுநர். இளங்கவிஞர். தமிழ் ஆர்வம் மிக்கவர்.
– கவிஞர் வாலியின் தீவிர ரசிகர். நம் அனைவரின் மனத்திலும் ஒரு இனிப்பான இடத்தை பிடித்தவர்.

இணையவழிக்கல்வியே இனிமை என முழங்க…
செல்வன் : சர்வேஷ் திருமலை
– இணையவழிக்கல்வியில் மேசன் நடுநிலைப்பள்ளியில் 7 வது நிலை படிப்பவர்.
– விஞ்ஞானம் மற்றும் சதுரங்க விளையாட்டுக்களில் ஆர்வம் மிக்கவர்.
– Cincinnati Scholostic Chess champions- ல் Bronze கோப்பை வென்றவர். Ohio Chess Championship போட்டியில் முதல் பரிசை வென்ற அணியை சேர்ந்தவர்.
– ” மண்வாசனை ” என்ற தலைப்பில் நடைபெற்ற ஆர்கன்சாஸ் தமிழ்ச்சங்க பேச்சுப்போட்டியில் இரண்டு முறை முதல் பரிசு வென்றவர்.
– நாஸா நிறுவனத்தில் பணியாற்றி விண்வெளிக்கு சென்று சாதிக்கவேண்டும் என்பது இவரது
நோக்கமாகும்.

இவருடன் இணைந்து அணிக்கு வலு சேர்க்க
செல்வி: ரிஷிகா ஜெயப்பிரகாஷ்
– இணையவழிக்கல்வியில் மேசன் உயர்நிலைப்பள்ளியில் 9 வது நிலை படிப்பவர்.
– Little Helpers என்ற தொண்டு நிறுவனத்தின் இளம் தலைமை அதிகாரியாக தன் 8 – வது அகவை முதலே. கருணை மற்றும் தொண்டு எண்ணங்களை பிற நண்பர்களிடமும் விதைத்தவர்.
– GCTS தமிழ் சங்க பேச்சுப்போட்டிகளில் 5 வருடங்கள் முதல் பரிசு பெற்றவர் .
– அறிவியல் ஒலிம்பியாட் , கிரிக்கெட், நடனம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்.
-Space Medicine (விண்வெளி மருத்துவம்) பயிற்சி செய்யவேண்டும் என்பது இவரது கனவு.
ஒரே ஒரு பெண் போட்டியாளராக 🙂

நேரடிக்கல்வியே அருமை என முரசு கொட்ட
செல்வன்: கோகுல் செந்தில்
– இணையவழிக்கல்வியில் மேசன் இடைநிலைப் பள்ளியில் 5 வது நிலை படிப்பவர்.
– தமிழ் மீது மிகுந்த ஆர்வம்கொண்டவர். பாரதி கலைமன்றம் அமெரிக்க அளவில் நிகழ்த்திய பேச்சுப்போட்டியில் பாரதியையும், திருவள்ளுவரையும் பற்றி பேசியவர்.
– ஹூஸ்டன் சாஸ்தா தமிழ் பவுண்டேஷன் நடத்திய திருக்குறள் போட்டியில் 55 மேற்பட்ட குறளை அதன் பொருளோடு விளக்கி பேசியவர்.
-உலக தாய்மொழி தினத்தில் மினசோட்டா தமிழ்ச் சங்கம் நடத்திய பேச்சுப் போட்டியில் என் எதிர்கால கனவுகள் என்ற தலைப்பில் பேசி இரண்டாம் பரிசு பெற்றவர்.
– அடிமுறை களரியில் ஆர்வம் கொண்டு கற்றுக்கொண்டிருப்பவர். Guitar இசைக்கருவி இசைப்பதில் கை தேர்ந்தவர். வானியல்வல்லுநராக (Astronomer) வேண்டும் என்பது இவரது எண்ணம்.

இவருடன் கைகோர்த்து அணிக்கு வலு சேர்க்க
செல்வன்: தருண்ராஜ் நாகராஜன்
– இணையவழிக்கல்வியில் மேசன் நடுநிலைப்பள்ளியில் 7 வது நிலை படிப்பவர்.
– ஓவியங்கள் வரைவது , பியானோ மற்றும் வயலின் இசைக்கருவிகளை இசைப்பதில் ஆர்வம் மிக்கவர். சதுரங்க விளையாட்டுகளில் பல விருதுகள் வென்றவர்.
– மேசன் பள்ளியில் நடைபெற்ற “US Green New Deal” சார்ந்த Speech & Debate- ல் இரண்டாம் பரிசு வென்றவர்.
– கார் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதிலும், நினைவுறுத்திக்கொள்ளவதிலும் வல்லவர். நவீன Biofuel கார்களை வடிவமைக்கும் கார் நிறுவனம் துவங்கவேண்டும் என்பதே இவரது கனவு.

மார்ச் 6, சனிக்கிழமை மாலை 6pm ESTமணிக்கு, Zoom வழியே இணைவோம்!!!